பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு கோவில்களுக்கு நடப்பாண்டில் மஹா கும்பாபிஷேகம்

Added : பிப் 14, 2020
Advertisement

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின், நான்கு உபகோவில்களுக்கு, நடப்பாண்டில் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. மேலும், திருப்பாச்சூர், நெடும்பரம் ஆகிய கோவில் குளங்கள், 1.36 கோடி ரூபாயில் சீரமைக்கவும், கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம், மொத்தம், 28 உபகோவில்களை பராமரித்து வருகிறது. இந்நிலையில், நெடும்பரம், கோதண்டராமர் கோவில், திருவாலங்காட்டில் உள்ள பத்ரகாளியம்மன், வினைதீர்த்த விநாயகர் மற்றும் சகஸ்தீஸ்வரர் ஆகிய நான்கு கோவில்களுக்கு, நடப்பாண்டில், மஹா கும்பாபிஷேகம் நடத்த, முருகன் கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

இதில், நெடும்பரம் மற்றும் திருப்பாச்சூர் கோவில் குளங்களை, மொத்தம், 1.36 கோடி ரூபாய் மதிப்பில் துார் வாரியும், பழுதடைந்த படிகள் மற்றும் மண்டபம் ஆகியவை சீரமைக்கவும் தீர்மானித்துள்ளது. இதற்கான பணியில், தற்போது கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.இது குறித்து, திருத்தணி முருகன் கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது:மேற்கண்ட நான்கு கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, இன்னும், இரண்டு மாதத்தில் திருப்பணிகள் துவங்கப்படும். தற்போது, அதற்கான மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

தொடர்ந்து, ஹிந்து அறநிலை துறை ஆணையரின் உத்தரவு பெற்று, பணிகள் துவங்கி, விரைந்து முடிக்கப்படும்.இன்னும், ஆறு மாதத்திற்குள், நான்கு கோவில்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், இரண்டு கோவில் குளங்களும் சீரமைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X