திறந்தவெளி ஆழ்துளை கிணறு: மக்கள் அதிர்ச்சி

Added : பிப் 14, 2020
Advertisement
 திறந்தவெளி ஆழ்துளை கிணறு: மக்கள் அதிர்ச்சி

ஊத்துக்கோட்டை : அதிகாரிகள் மெத்தனத்தால், ஆழ்துளை கிணறு மூடப்படாமல் திறந்தவெளியில் உள்ளதால், உயிர் பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

திருச்சி அருகே, மணப்பாறை கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த, சுஜித்வில்சன், 2, என்ற சிறுவன் பரிதாபமாக இறந்தான்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், பயன்பாட்டில் இல்லாத, ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அதிகாரிகள் அதை மூடும் பணியில் ஈடுபட்டனர். இதில் சில அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்து வருகின்றனர்.

எல்லாபுரம் ஒன்றியம், பேரண்டூர் கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை இருப்பதே இதற்கு சாட்சி.எல்லாபுரம் ஒன்றியம், பேரண்டூர் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஏரியை ஒட்டி, குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே, இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டன.

துவக்கத்தில் தண்ணீர் கிடைத்த நிலையில், பின், நீர் இல்லாததால், அதை பயன்படுத்தாமல் விடப்பட்டது.ஆனாலும், ஆழ்துளை கிணறு மூடப்படாமல் உள்ளதால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து, குழந்தைகள் தெரியாமல் இதில் விழும் அபாயம் உள்ளது.உயிர்சேதம் ஏற்படும் முன், திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X