தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Added : பிப் 14, 2020
Advertisement
திருவள்ளூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், ஜனவரி, 1, 2020ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல், டிசம்பர், 23ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், 16.41 லட்சம் ஆண்கள்; 16.66 பெண்கள்; 716 திருநங்கையர் என, மொத்தம், 33.08 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.

சுருக்க முறை திருத்தம்:

இப்பட்டியலில், ஏதேனும் திருத்தம், பெயர், இடமாற்றம் செய்யும் வகையில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம், கடந்த மாதம் நடந்தது.இதில், 1.7 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில், 6,431 விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டு, 1.1 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.இதையடுத்து, புதிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலெக்டர் மகேஸ்வரி, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மத்தியில், நேற்று வெளியிட்டார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர், நகராட்சி, பேரூராட்சி மற்றும், 3,604 ஓட்டுச்சாவடி அமைந்துள்ள, 1,198 பள்ளிகளில், பொதுமக்கள் பார்வைக்கு, புதிய வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்த பின், தற்போது, மாவட்டம் முழுவதும், 16.80 ஆண்கள்; 17.10 லட்சம் பெண்கள்; 746 திருநங்கையர் என மொத்தம், 33.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த, முறை வெளியிடப்பட்ட பட்டியலை விட, 85,757 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும், 2,107 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பன்னீர்செல்வம்- பொது, புனிதா- தேர்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜனவரி, 1ம் தேதியன்று, 18 வயதை பூர்த்தி செய்து, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர் மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர், உரிய படிவத்தை பூர்த்தி செய்து, வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X