2,500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; கடைகளுக்கு சீல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2,500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; கடைகளுக்கு 'சீல்'

Added : பிப் 14, 2020
Share

திருவள்ளூர் : ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சியில், பூ, இனிப்பு கடைகள், ஓட்டல்களில், நகராட்சி ஆணையர் சந்தானம் தலைமையில், சுகாதார அலுவலர்கள், நேற்று, திடீர் சோதனை நடத்தினர்.பூக்கடைகள், இனிப்பு கடைகளில் சோதனையிட்ட போது, பானி பூரி கடை ஒன்றில், 200 கிலோவிற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பை, கப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து, அந்த கடைகளை, 'சீல்' வைத்த, நகராட்சி அதிகாரிகள், அவற்றின் உரிமையாளரிடம் விசாரித்தனர். அப்போது, ஜட்ஜஸ் காலனியில், ஒரு வீட்டில், பிளாஸ்டிக் பை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.உடனே, அங்கு சோதனை செய்ததில், பண்டல், பண்டலாக, பிளாஸ்டிக் பை, கவர், டம்ளர் உள்ளிட்டவைகள் இருந்தன.இவை, 2,500 கிலோ இருந்தன. பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருந்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X