பொது செய்தி

தமிழ்நாடு

காவல் நிலைய பணிகள் பள்ளி மாணவர்கள் பார்வை

Added : பிப் 14, 2020
Advertisement

திருவள்ளூர் : காவல் நிலையம் மற்றும் காவலர்களின் பணிகள் குறித்து, அரசு பள்ளி மாணவர்கள், நேற்று, நேரில் பார்வையிட்டனர்.

திருவள்ளூர் அடுத்த, பட்டரைபெரும்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளி யில், காவல் மாணவர் படை துவக்கப்பட்டு உள்ளது.இதில், 25க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவி யர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, மாவட்ட காவல் துறையினர், போக்குவரத்து விதிமுறை உட்பட, பல்வேறு நடைமுறைகள் குறித்து, பயிற்சி அளித்துள்ளனர்.

இவர்கள் மூலம், பள்ளி மாணவ - மாணவியருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், பட்டரைபெரும்புதுார் பள்ளியைச் சேர்ந்த காவல் மாணவர் படை மாணவ - மாணவியர், நேற்று, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கு வந்தனர்.அங்கு, காவல் நிலைய அலுவலகம், போலீசாரின் பணி, ஆயுதம் ஆகியவற்றை பார்வையிட்டனர். அவர்களுக்கு, டி.எஸ்.பி., கங்காதரன் விளக்கம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X