பொது செய்தி

தமிழ்நாடு

வடவேர்பட்டு சாலைக்கு மின் விளக்கு: பொதுமக்கள் கோரிக்கை

Added : பிப் 14, 2020
Advertisement

சின்னிவாக்கம் : சின்னிவாக்கம் - வடவேர்பட்டு சாலையில், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், சின்னிவாக்கம் - வடவேர்பட்டு சாலையில், 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன.இச்சாலை ஓரமாக இருக்கும், பெரும்பாலான மின் கம்பங்களில், மின் விளக்கு வசதி இல்லை.இதனால், வாலாஜாபாத், சின்னிவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று, இரவு வடவேர்பட்டுக்கு வீடு திரும்புவோர், இருளில், அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.இந்த சாலையில், ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவதாக, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, சின்னிவாக்கம் - வடவேர்பட்டு சாலையில், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X