புதுப்பட்டினம் குறுவட்டம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பட்டினம் குறுவட்டம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 14, 2020
Share

மாமல்லபுரம் : புதுப்பட்டினத்தை, வருவாய் குறுவட்டமாக உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருக்கழுக்குன்றம் தாலுகா, செங்கல்பட்டு தாலுகாவிலிருந்து, 1996ல் உருவாக்கப்பட்டது.

வளர்ச்சி:

இத்தாலுகாவில் உள்ள திருக்கழுக்குன்றம், நெரும்பூர் குறுவட்டங்களில், தலா, 19 வருவாய் கிராமங்கள் உள்ளன.அதேபோல், மாமல்லபுரம் குறுவட்டத்தில், 18; பொன்விளைந்தகளத்துார் குறுவட்டத்தில், 16 என, வருவாய் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.கல்பாக்கம் சுற்றுப்புற பகுதிகளில், மக்கள் தொகை அதிகரிப்பு, வசிப்பிட விரிவு என, இப்பகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது.

இங்குள்ள புதுப்பட்டினம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இச்சூழலில், கல்பாக்கம் நகரியம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள், நெரும்பூர் குறுவட்டத்தில் உள்ளன.

அணுபுரம், நெய்குப்பி உள்ளிட்ட பகுதிகள், மாமல்லபுரம் குறுவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மேற்கண்ட பகுதியினர், வருவாய் துறை சேவைகள் பெற, 10 - 15 கி.மீ., தொலைவு, மாமல்லபுரம், நெரும்பூர் சென்று அவதிப்படுகின்றனர்.

தற்கால வளர்ச்சிக்கேற்ப, புதுப்பட்டினம் குறுவட்டம் அமையவேண்டியது அவசியம். இதே மாவட்டத்தில், பிற வட்டங்களில், அதிக குறுவட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இங்கு மட்டும், நான்கே குறுவட்டங்கள் உள்ளன.

வலியுறுத்தல்:

எனவே, கல்பாக்கம் அருகாமை, 8 கி.மீ., தொலைவு உள்ள பகுதிகளுடன், புதுப்பட்டினத்தை சேர்த்து, குறுவட்டம் ஏற்படுத்தலாம். செங்கல்பட்டு மாவட்டம், புதிதாக உருவாகியுள்ள சூழலில், புதுப்பட்டினம் குறுவட்டம் ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X