பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி மையத்திற்கு தனி கட்டடம்: பொதுமக்கள் கோரிக்கை

Added : பிப் 14, 2020
Share
Advertisement

மதுராந்தகம் : இந்திராபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு, தனி கட்டடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, இந்திராபுரம் கிராமத்தில், அங்கன்வாடி மையம் உள்ளது. இதில், 16 குழந்தைகள் பயில்கின்றனர்.இந்த மையத்திற்கென நிரந்தர கட்டடம் இல்லாததால், ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது.உள்ளாட்சி தேர்தலுக்கு பின், கிராம ஊராட்சி சேவை மையத்தில், ஊராட்சி நிர்வாகம் சம்பந்தமான பணிகள் நடைபெறும் என்பதால், இக்கட்டடத்தில், அங்கன்வாடி செயல்படுவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.எனவே, இந்திராபுரம் பகுதி குழந்தைகளுக்கென, இப்பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X