தமிழ்நாடு

கோடைக்கு முன் வறண்டது அரையப்பாக்கம் ஏரி

Added : பிப் 14, 2020
Advertisement

மதுராந்தகம் : கோடைக்கு முன்பே, அரையப்பாக்கம் ஏரி வறண்டு கிடக்கிறது.

மதுராந்தகம் ஒன்றியம், அரையப்பாக்கம் கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 250 ஏக்கர் பரப்பு ஏரி உள்ளது.

460 ஏக்கரில் விவசாயம்:

இந்த ஏரி, பருவ மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால், அந்நீரை நம்பி, அரையப்பாக்கம் மற்றும் மேட்டுப்பாளையம் கிராமங்களில், 460 ஏக்கர் பரப்பில், விவசாயம் செய்யப்படும். மழைக்காலத்தில், மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், நீர்வரத்து கால்வாய் வழியாக, அரையப்பாக்கம் ஏரிக்கு வரும்.இந்நிலையில், கடந்த ஆண்டுகளில், முறையான பராமரிப்பு இல்லாததால், நீர்வரத்து கால்வாய் துார்ந்து, தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. இதனால், அரையப்பாக்கம் ஏரி, 2015ம் ஆண்டுக்கு பின், இதுவரை, முழுமையாக நிரம்பாமல் உள்ளது. கடந்தாண்டு பெய்த மழைக்கு, ஓரளவு மட்டுமே நிரம்பிஇருந்த ஏரி, தற்போது, வறண்டு காணப்படுகிறது.

துார் வாரணும்:

இதனால், ஏரி பாசனத்தை நம்பி உள்ள விவசாய நிலங்களும், தரிசாகும் நிலையில் உள்ளன.எனவே, அரையப்பாக்கம் ஏரியின் முக்கிய நீர் ஆதாரமான, மதுராந்தகத்தில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும். ஏரியையும் துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X