பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சாலை கழிவுகள் எரிப்போர் மீது நடவடிக்கை: சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

மேவளூர்குப்பம் : மேவளூர்குப்பம் ஊராட்சியில், தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேவளூர்குப்பம் ஊராட்சியில், 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இருங்காட்டுக்கோட்டை, 'சிப்காட்' அருகே உள்ள இந்த ஊராட்சி எல்லையில், ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.இந்நிலையில், மர்ம நபர்கள், தொழிற்சாலைகளில் உள்ள கழிவுகளை எடுத்து வந்து, மேவளூர்குப்பம் பகுதியில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்லும் முக்கிய கால்வாயான கிருஷ்ணா கால்வாய் ஒரம், கொட்டி எரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மேலும், கழிவுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு, அருகே உள்ள கால்வாயில் காலப்பதால், நீர்நிலைகளும் மாசடைகின்றன.எனவே, தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரிப்போர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X