முதல்வர் கோப்பை போட்டிகள் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கோப்பை போட்டிகள் துவக்கம்

Added : பிப் 14, 2020
Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட கலெக்டர் பொன்னையா, நேற்று துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், நேற்று துவங்கியுள்ளன.காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், விளையாட்டு போட்டிகளை, மாவட்ட கலெக்டர் பொன்னையா, துவக்கி வைத்தார்.

தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்து பந்து, இறகுபந்து, ஜூடோ, குத்துச்சண்டை மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டு போட்டிகள், வரும், 16ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.மாவட்ட அளவில், தடகளம், நீச்சல், இறகுபந்து, குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களும், குழு விளையாட்டு போட்டிகளில் தேர்வு செய்யப்படும் அணி மட்டுமே, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X