பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வகுப்பறை திறப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்போரூர் : செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிஸ், கொட்டமேடு பள்ளியில், புதிய வகுப்பறை கட்டடத்தை, நேற்று, திறந்து வைத்தார்.

திருப்போரூர் அடுத்த, கொட்டமேடு கிராமத்தை, 'கியூல்கம்' மற்றும் 'ஹேண்ட் இன் ஹேண்ட்' தன்னார்வ நிறுவனம் தத்தெடுத்து, தரமான கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.அதன் ஒரு பகுதியாக, அப்பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, 24 லட்சம் ரூபாயில், இரண்டு வகுப்பறை கட்டடம், 'ஸ்மார்ட்' வகுப்பறை, அறிவியல் ஆய்வகம், குடிநீர் சுத்திகரிப்பு மையம், கழிப்பறை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை, கடந்தாண்டு துவங்கி, தற்போது முடித்துள்ளது. இதன் திறப்பு விழா, பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ் பங்கேற்று, புதிய வகுப்பறை கட்டடம், அறிவியல் ஆய்வகத்தை, திறந்து வைத்தார்.தொடர்ந்து, எட்டு மாணவியருக்கு, அரசின் விலையில்லா மிதிவண்டி, அப்பகுதியில் தையல் பயிற்சி முடித்த, 35 பெண்களுக்கு சான்றிதழ், தங்கள் வீட்டில் கழிப்பறை கட்ட வலியுறுத்திய மாணவர் ஒருவருக்கு, நினைவு பரிசுகளை வழங்கினார்.தொடர்ந்து, 'ஸ்மார்ட்' வகுப்பறை, குடிநீர் சுத்திகரிப்பு மையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.விழாவில், அரசு ஊழியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X