பொது செய்தி

தமிழ்நாடு

மாநில சதுரங்க போட்டி சஞ்சய் குரு, ரஞ்சனி முதலிடம்

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: மாநில அளவிலான சதுரங்க போட்டியில், சஞ்சய் குரு மற்றும் ரஞ்சனி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

எஸ்.எஸ்.கே., சதுரங்க மையம் சார்பில், மேற்கு தாம்பரம், 'சான் அகாடமி'யில், மாநில அளவிலான சிறுவர் -- சிறுமியருக்கான சதுரங்க போட்டி சமீபத்தில் நடந்தது.இதில், இருபாலர் பிரிவிலும், 8, 10, 12 மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில், போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 300 பேர் பங்கேற்றனர்.

இதில், 8 வயதிற்கு உட்பட்ட சிறுவர் பிரிவில், சஞ்சய் குரு; சிறுமியர் பிரிவில், ரஞ்சனி; 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவில், தர்ஷன்; சிறுமியர் பிரிவில், நட்சத்திரா; 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவில், ரவிசங்கர் பிரஜித்; சிறுமியர் பிரிவில், மதி நித்யா; 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவில், டில்லீஷ்; சிறுமியர் பிரிவில், ரெஹானா ஆகியோர் முதலிடம் வென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X