பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை கழிவு நீர் இணைப்பு துண்டிப்பு தீவிரம்

Added : பிப் 14, 2020
Advertisement

பல்லாவரம்: நம் செய்தியின் எதிரொலியாக, பல்லாவரம் பெரிய ஏரியை பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு புறம்பான கழிவு நீர் இணைப்புகளை கண்டறிந்து, துண்டிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பல்லாவரம் பெரிய ஏரி, பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையால், இரண்டு பகுதிகளாக உள்ளது. ரூ.14.98 கோடிஒரு பகுதியில், நகராட்சி குப்பை கிடங்கும், மற்றொரு பகுதி துார் வாரப்படாமலும் இருந்தது. இந்நிலையில், உலக வங்கி நிதி, 14.98 கோடி ரூபாய் செலவில், பல்லாவரம், கீழ்க்கட்டளை ஏரிகளை புனரமைக்கும் பணி, கடந்தாண்டு துவங்கியது.

துார் வாரி ஆழப்படுத்துதல்; கரையை பலப்படுத்தி, கருங்கற்கள் பதித்தல்; மதகு அமைத்தல்; கழிவுநீர் கலப்பதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு ஏரிகளிலும், 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. சமீபத்தில் பெய்த பருவ மழையில், பல்லாவரம் ஏரி நிரம்பி காணப்படுகிறது.

அதேநேரத்தில், இவ்வேரியில் கழிவு நீர் கலப்பது தொடர்கிறது. இதனால், புனரமைத்தும் பயனில்லை. உலக வங்கி நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என, நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

தொடரும் நடவடிக்கை:

இதையடுத்து, ஏரியை ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பதை தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. அப்படியிருந்தும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, சட்டத்திற்கு புறம்பான இணைப்புகள் மூலம், கழிவு நீர் கலப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஏரியை சுற்றி ஆய்வு செய்து, சட்டத்திற்கு புறம்பான இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. சஞ்சய்காந்தி, லட்சுமி நகர்களில், இதுவரை, 160க்கும் மேற்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X