சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மீண்டும் தி.மு.க.,வுக்கு திரும்பும் ராஜகண்ணப்பன்!

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 மீண்டும் தி.மு.க.,வுக்கு திரும்பும் ராஜகண்ணப்பன்!

''பதவி கிடைச்சாலும், நிரந்தரம் இல்லைன்னு சொல்றாங்க...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''யாருக்கு, என்ன பதவி கிடைச்சிருக்கு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரா, 'மாஜி' அமைச்சர் செல்வ கணபதியை, சமீபத்துல நியமிச்சிருக்காங்களே... அது நிரந்தரம் இல்லைங்க... ஏன்னா, செல்வகணபதி மீதான சுடுகாட்டு கூரை ஊழல் வழக்குல, ரெண்டு வருஷம் சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை, சென்னை ஐகோர்ட் உறுதிப்படுத்திடுச்சுங்க...

''இதனால, ராஜ்யசபா, எம்.பி., பதவியை இழந்தவர், ஆறு வருஷத்துக்கு தேர்தல்ல போட்டியிடுற தகுதியையும் இழந்துட்டாருங்க... தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்துல, 'அப்பீல்' போயிருக்கிறதால, சிறை தண்டனையை மட்டும் நிறுத்தி வச்சிருக்காங்க...

''உச்ச நீதிமன்றத்துல, தண்டனையை உறுதி பண்ணிட்டா, செல்வகணபதி பதவி எல்லாம், 'பணால்' ஆகிடும்னு, அவருக்கு எதிர் கோஷ்டியினர் சொல்லிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''வறண்டு கிடந்த தெப்பக்குளத்துல தண்ணீர் நிரப்பி, சாதனை படைச்சிட்டாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு, வைகை ஆற்று தண்ணீரை விட்டு நிரப்பணும்னு, தக்கார் கருமுத்து கண்ணனும், இணை கமிஷனர் நடராஜனும், அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திட்டு இருந்தாவ வே...

''இதனால, 1 கோடி ரூபாய் செலவுல, பொதுப்பணித் துறையும், மாநகராட்சியும் சேர்ந்து, இணைப்பு வாய்க்கால் கட்டி, தெப்பகுளத்துக்கு தண்ணீரை திருப்பி விட்டுச்சு...

''போன, 8ம் தேதி நடந்த தெப்ப திருவிழாவுல, குளத்துல கடல் போல தண்ணீர் நிரம்பி இருந்துச்சு... இதைப் பார்த்து, பக்தர்கள் பரவசமாயிட்டாவ... தக்கார், இணை கமிஷனரை எல்லாரும் பாராட்டிட்டு போனாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''மறுபடியும், தி.மு.க.,வுக்கே திரும்ப போறார் ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், குப்பண்ணா.

''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''லோக்சபா தேர்தல்ல, அ.தி.மு.க.,வுல, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, 'சீட்'
தராததால, தலைமையை விமர்சனம் செஞ்சார்... தேர்தல்ல, தி.மு.க.,வுக்கு ஆதரவா செயல் பட்டார் ஓய்...

''அவரது ஆதரவாளர்கள் வட்டம், நாளுக்கு நாள் சுருங்கிண்டே வரது... இதனால, சுதாரிச்ச அவர், மறுபடியும், தி.மு.க.,வுல சேர முடிவு பண்ணிட்டார் ஓய்...

''வர்ற, 23ம் தேதி, மதுரையில, ஸ்டாலின் தலைமையில, தி.மு.க.,வுல இணைய இருக்கார்... இதுக்காக, மதுரை, சிவகங்கை மாவட்டங்கள்ல இருந்து, ஏராளமான ஆதரவாளர்களை திரட்டற பணியில தீவிரமா இறங்கியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
17-பிப்-202020:57:22 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அன்று சில கோடிக்கு சிதம்பரத்திடம் சரனடைந்தவர்தான்
Rate this:
Share this comment
Cancel
A R J U N - sennai ,யூ.எஸ்.ஏ
15-பிப்-202011:01:16 IST Report Abuse
A R J U N ...முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, 'சீட்' தராததால, தலைமையை விமர்சனம் செஞ்சார்...இப்படியெல்லாம் கட்சி மாறுவது சகஜமாகி விட்டது,குஷ்புவுக்கு bjp ஒன்றுதான் பாக்கி இதுகளுக்கெல்லாம் நாம் வெயிலிலும்,மழையிலும் நின்று ஓட்டுப்போட்டு எப்படியாவது ஆளும் கட்சிக்கு துணைபோய் மந்திரி பதவியும் வாங்கி விடுகிறார்கள்,சுயேட்சைக்கு இனி ஒட்டு போடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
15-பிப்-202009:32:04 IST Report Abuse
மூல பத்திரம் ராஜ கண்ணப்பனுக்கு ஆதரவாளர்கள் வட்டம் இருக்குதா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X