குப்பையில் இருந்து உரம் தயாரித்த துப்புரவு ஊழியர்களுக்கு சன்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையில் இருந்து உரம் தயாரித்த துப்புரவு ஊழியர்களுக்கு சன்மானம்

Added : பிப் 14, 2020
Share

ராயபுரம் : குப்பையில் இருந்து உரம் தயாரித்த, துப்புரவு ஊழியர்களுக்கு, அதன் விற்பனை பணத்தை, வடக்கு வட்டார துணை ஆணையர் ஆகாஷ் சன்மானமாக வழங்கினார்.

ராயபுரம் மண்டலத்தில், 49 வார்டு முதல் 63 வார்டு வரை உள்ளது. இங்குள்ள, 15 வார்டுகளில் உள்ள காய்கறி சந்தைகள், ஓட்டல்கள், நிறுவனங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து, துப்புரவு ஊழியர்கள் உரம் தயாரித்து வருகின்றனர். இப்பணியில், 15க்கும் மேற்பட்ட மையங்களில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.மேலும், ராயபுரம் மண்டலத்தில், 10க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் அமைத்து, மாநகராட்சியினர் உரத்தை விற்பனை செய்து வருகின்றனர்.

சமீபத்தில், ராயபுரம், ஜி.ஏ.சாலையில் உள்ள கே.சி.எஸ்.சங்கர லிங்க நாடார் மேல்நிலைப் பள்ளிக்கு, 4.5 டன் உரம், 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த விற்பனை பணத்தை, துப்புரவு ஊழியர்களுக்கு சன்மானமாக வழங்கும் நிகழ்ச்சி, வடக்கு வட்டார துணை ஆணையர் ஆகாஷ் தலைமையில், ராயபுரத்தில் நேற்று நடந்தது.குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட, 25 ஊழியர்களுக்கு, உரம் விற்பனை வருவாய் சன்மானமாக வழங்கப்பட்டது.

வடக்கு வட்டார துணை ஆணையர் ஆகாஷ் கூறியதாவது:துப்புரவு ஊழியர்கள் தயாரித்த உரத்தை, துப்புரவு ஊழியர்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபடலாம். மண்டலத்திற்குட்பட்ட, உரம் விற்பனை மையங்கள், மாடி தோட்டம் வைத்திருப்போர், பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்து, அதன் வருவாயை துப்புரவு ஊழியர்கள் எடுத்து கொள்ளலாம். இத்திட்டத்தை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X