இதே நாளில் அன்று

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 இதே நாளில் அன்று

பிப்ரவரி, 15, 1974
கொத்தமங்கலம் சுப்பு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, கன்னாரியேந்தல் என்ற கிராமத்தில், மகாலிங்கம் ஐயர் -- கனகம்மாள் தம்பதிக்கு மகனாக, 1910, நவ., 10ல் பிறந்தார். நாட்டுப்புற பாடல்களை இயற்றி உள்ளார். முதன்முதலில், 1935ல், பட்டினத்தார் திரைப்படத்தில் நடித்தார். 1947ல், மிஸ் மாலினி திரைப்படத்தை இயக்கி, அதில், தானே கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பின், மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் ஹிந்தியில் வெளியானது.

அவ்வையார் என்ற திரைப்படத்தை, 1953ல் இயக்கினார். கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட, அன்றைய பிரபலங்கள் நடித்தனர். இத்திரைப்படத்தில், மனைவி சுந்தரிபாயுடன் சிறு வேடம் ஒன்றில், சுப்பு நடித்தார். 150 சிறுகதைகள், 100க்கும் மேற்பட்ட நாடகங்கள் எழுதி உள்ளார். நடிகர், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என, பன்முகம் கொண்ட இவர், பத்மஸ்ரீ, கலாசிகாமணி போன்ற விருதுகளை பெற்றார். 1974, பிப்., 15ல் காலமானார்.

அவர் இறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
15-பிப்-202006:35:25 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan ஆனந்த விகடனில் இவர் எழுதிய தொடர்கதைதான் திரைப்படமாக்கப்பட்ட தில்லானா மோகானம்பாள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழா விழி, தமிழே விழி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X