பொது செய்தி

தமிழ்நாடு

62 காலி பணியிடங்களுக்கு 12 ஆயிரத்து 652 பேர் விண்ணப்பம்

Added : பிப் 14, 2020
Advertisement

சேலம்: சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில், 62 காலிப் பணியிடங்களுக்கு, 12 ஆயிரத்து, 652 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின், ஆள் சேர்ப்பு நிலையம் சார்பில், காலிப் பணியிடங்களை நேரடியாக நிரப்ப, ஜன., 10ல், அறிவிப்பு வெளியிடப்பட்டது. கல்வித் தகுதியாக, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மத்திய கூட்டுறவு வங்கியில், அலுவலக உதவியாளர்கள், 53, ஓட்டுனர் - 4, இதர கூட்டுறவு கடன் சங்கங்களில், அலுவலக உதவியாளர் - 5 என மொத்தம், 62 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்கான விண்ணப்பம், பிப்., 7 வரை பெறப்பட்டது. அலுவலக உதவியாளர் பணிக்கு, 12 ஆயிரத்து, 201; ஓட்டுனர் பணிக்கு, 451 என மொத்தம், 12 ஆயிரத்து, 652 பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஒரு பணிக்கு, சராசரியாக, 204 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், கடும் போட்டி நிலவுகிறது. இதில், 90 சதவீதம் பேர், பி.ஏ.,- பி.இ.,- எம்.இ., உள்ளிட்ட பட்டதாரிகள் ஆவர். நேர்காணல் நடத்தி, இடஒதுக்கீடு அடிப்படையில், பணி ஆணை வழங்கப்படுகிறது. இதற்காக, தகுதி அடிப்படையில், அழைப்பு கடிதம் அனுப்புவதற்கான பணிகள், முடுக்கி விடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X