சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை -

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை -

'சிறுபான்மையினருக்கு, இப்போது தான் செய்து வருகிறாரே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் மணியன் பேச்சு: குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக, பாதிப்பு இருப்பதாக கூறி, சிறுபான்மையின மக்களை, அ.தி.மு.க., வுக்கு எதிராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திசை திருப்பி வருகிறார். முஸ்லிம்களுக்காக அவர், இதுவரை எதுவும் செய்ததில்லை.

'வாஸ்தவம் தான். அந்த பெருமை கிடைத்த பலரும், திருப்திப்பட்டுக் கொள்வதில்லையே... அது ஏன்?' என, எடக்கு மடக்காக கேட்கத் துாண்டும் வகையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேச்சு: இல்லற வாழ்க்கை ஒருவருக்கு சிறப்பாக அமைந்து விட்டால், அதை விட பெரிய சிறப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த பெருமை தான், அவர்களுக்கு இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் ஆகும்.

'பா.ஜ.,வாவது, எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உங்கள் கூட்டணி கட்சியான, காங்., பூஜ்யம் தானே; அதற்கு காரணம், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பாக இருக்குமோ என, பதில் கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி: டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது; பா.ஜ., படுதோல்வி அடைந்துள்ளது. மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது தான், இந்த தோல்விக்கு காரணம்.

'உண்மைக்கு இந்த காலத்தில், எங்க சார் மரியாதை இருக்குது; போலி அறிவிப்புகள், பொய் பிரசாரங்கள் தானே, மக்கள் மத்தியில் எடுபடுது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி: முதல்வர் இ.பி.எஸ்., உண்மையை சொல்லி, தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்து வருகிறார். விவசாயிகளின் நலனுக்காகத் தான், காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். விரைவில், இந்த அறிவிப்பு சட்டப்பூர்வமாக ஆக்கப்படும்.

'இப்படி குதர்க்கம் பேசி பேசி, தமிழகத்தையே இழுத்து மூட திட்டமிட்டுள்ளது நன்கு தெரிகிறது...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: 'நீட்' தேர்வு விவகாரம் போலவே, 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தையும், தமிழகத்தில் செயல்படுத்த, மத்திய அரசு துடிக்கிறது. அதை அறியாமல், தமிழக அரசு, தமிழக விவசாயிகளை ஏமாற்ற நினைக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இழுத்து மூட, மத்திய அரசு தயாரா?


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-202008:45:47 IST Report Abuse
மோகன்  இவ்வளவு வயசாகியும் அறிவென்பது கொஞ்சம் கூட கிடையாது இந்த வை கோ விற்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X