பொது செய்தி

தமிழ்நாடு

நதிகள் இணைப்புக்கு ரூ.700 கோடி: புதுக்கோட்டையில் கொண்டாட்டம்

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 நதிகள் இணைப்புக்கு ரூ.700 கோடி:  புதுக்கோட்டையில் கொண்டாட்டம்

புதுக்கோட்டை: காவிரி, வைகை, குண்டாறு, இணைப்பு திட்டத்திற்கு, பட்ஜெட்டில், தமிழக அரசு, முதல் கட்ட நிதியாக, 700 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இதை, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். காவிரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்து, கரூர், மாயனுாரில் அணை கட்டி, அங்கிருந்து, கிளை வாய்க்கால்கள் மூலமாக, குண்டாறு, வைகைக்கு திருப்பி விட வேண்டும்.இப்படி செய்தால், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட, எட்டு மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர்.

இதற்கு காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் எனவும் விவசாயிகள் பெயர் சூட்டியிருந்தனர்.விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான இத்திட்டம், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் எனவும், முதல் கட்டமாக, கரூர், மாயனுாரில் இருந்து, புதுக்கோட்டை, வெள்ளாறு வரை பணிகள் துவங்க, 7,667 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், சட்டசபையில் கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதல் கட்ட நிதியாக, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மற்றும், அ.தி.மு.க.,வினர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உற்சாகம்கடந்தாண்டு, பிப்., 28ல், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை, முதல்வர், இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், வறட்சி நிறைந்த இடங்களில் உள்ள, 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 974 குட்டைகளில் நீர் நிரப்பி, பாசனம் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு பயன்படுத்துவதே, இத்திட்டம். பவானி ஆற்றில், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் அணையை தாண்டி, உபரியாக செல்லும் தண்ணீர், குழாய் மூலம் நீரேற்றம் செய்து, இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. மொத்தம், 1,652 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள இப்பணியை, 'எல் அண்ட் டி' நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான குழாய்கள் தருவிக்கப்பட்டுள்ளன.

இப்பணிக்கு, கடந்த பட்ஜெட்டில், மாநில அரசு, 1,000 கோடி ரூபாயை விடுவித்தது. நேற்று வெளியான பட்ஜெட்டில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். அத்திக்கடவு - -அவிநாசி திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் வேலுசாமி, சுப்ரமணியம், சம்பத்குமார் கூறுகையில், 'இத்திட்டம் நிறைவேற, தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.மூன்று மாதங்களாக திட்டப்பணி வேகம் எடுத்திருக்கிறது.இந்நிலையில், 500 கோடி ரூபாய் அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை நிறைவு செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-202008:06:41 IST Report Abuse
ஆரூர் ரங் இல்லத்திட்டங்களையும் வெடி வெடித்துக் கொண்டாடி வரவேற்றுவிட்டு பிறகு அதிமுகவுக்கு எதிராக ஓட்டுப்போட்டு விசுவாசத்தைக்காட்டுங்கள் டுமீலண்டா
Rate this:
Share this comment
Cancel
Manoharan Munusamy - Kumbakonam,இந்தியா
15-பிப்-202003:24:50 IST Report Abuse
Manoharan Munusamy செயல்படும் அரசு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X