அணுகு சாலையில் குப்பை எரிப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

மாதவரம் : குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டதால், அணுகு சாலை மற்றும் நீர்நிலை பகுதிகள், குப்பை கொட்டி எரிக்கும் இடமாக மாறி வருகின்றன.

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில், 12 வார்டுகள் உள்ளன. அவற்றில் தினமும், 90 டன் குப்பை சேகரமாகிறது. அதில், 40 டன், மக்கும் குப்பை உரமாக தயாரிக்கப்படுகிறது. 21 டன் மக்கா குப்பை, விற்பனை செய்யப்படுகிறது.மீதமுள்ள, 29 டன், பிரிக்க முடியாத குப்பை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. குப்பை சேகரிப்புக்காக, 2016ம் ஆண்டு முதல், 737 குப்பை தொட்டிகள் பயன்படுத்தப்பட்டன.

அவை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு, கடந்தாண்டு இறுதியில், 100 குப்பை தொட்டிகள் மட்டும் பயன்படுத்தப் படுகின்றன.இந்நிலையில், மாதவரம் மண்டலம், 24வது வார்டில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள், புழல் - மதுரவாயல் புறவழிச் சாலையின் அணுகு சாலை மற்றும் புத்தகரம் தாங்கல் ஏரி ஆகியவற்றில் கொட்டப்படுகின்றன.அதிகாலையில், அவை தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டத்தில், சண்முகபுரம், புத்தகரம், சூரப்பட்டு சுற்றுவட்டாரங்களில் வசிப்போர், மூச்சு திணறலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.

இது குறித்து, மக்கள்சிலர் கூறுகையில், 'பொது சுகாதார மேம்பாட்டிற்காக, குப்பை இல்லா நகரமாக்குகிறோம் என, குப்பை தொட்டிகளை அகற்றி, மாதவரத்தை குப்பை குவியல் நகரமாக்கி விட்டனர். அணுகு சாலையில் குவியும் குப்பையால், விபத்து, உயிரிழப்பு ஏற்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X