சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 14, 2020
Advertisement
 'டவுட்' தனபாலு

தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: நான் சின்னப் பையனாக, பள்ளிக் கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே, தமிழகத்தில் ஒருவர், அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார். அவ்வாறு கூறும் அந்த நடிகர் குறித்து கவலைப்பட தேவையில்லை.

'டவுட்' தனபாலு: அடேங்கப்பா... அரசியல் நாகரிகம் கருதி, அந்த நடிகரின் பெயரை நீங்கள் கூறவில்லை என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. எனினும், நீங்கள் சொல்லும் அந்த நடிகர், ரஜினி என்பது, டவுட் இல்லாமலேயே அனைவருக்கும் தெரியும் போது, எதற்காக அவர் பெயரை மறைக்கிறீர்கள்; அவருக்கு, 'பாப்புலாரிட்டி' கிடைத்து விடும் என்று பயந்தா?

த.மா.கா., தலைவர் வாசன்: ஜப்பான் கடலில் தத்தளிக்கும் கப்பலில் உள்ள தமிழர்கள் உட்பட, இந்தியர்கள் அனைவரையும் மீட்க, இந்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கப்பலில் உள்ள இந்தியர்கள் எவரும், 'கொரோனா' வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது படியே, மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து, அந்த கப்பலில் இருக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரையும், இந்தியா கொண்டு வருகிறது என வைத்துக் கொள்வோம். கப்பலில் வந்தவர்களுக்கு ஆறுதல் கூற, உங்களைப் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் செல்வரா என்பதில் எனக்கு பலத்த, 'டவுட்' ஏற்பட்டுள்ளது. இப்போது அறிக்கை விடும் தலைவர்கள், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி விட மாட்டார்களோ!

தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: தி.மு.க., தலைவர் கருணாநிதி மகன் என்ற ஒற்றை தகுதியை மட்டும் வைத்திருக்கும் ஸ்டாலின், தமிழினத்திற்கு தலைவனாக வேண்டும் என்ற பேராசை வெறியோடு, பதவிக்காக அலைகிறார் என்பதை, தமிழக மக்கள் அறிவர். நல்லதை பாராட்ட மனமில்லாமல் போனாலும், அவதுாறு செய்யும் குணத்தையாவது, அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.

'டவுட்' தனபாலு: தமிழினத்திற்கு தலைமை வகிக்க வேண்டும் என்பதில், பல கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் இடையே, ஏற்கனவே, தமிழகத்தில் பலத்த போட்டி உள்ளது என்பதை, நீங்கள் அறிய மாட்டீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. அதுபோல, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர், முதல்வராகும் வரை, இதுபோன்ற அவதுாறு செய்வார் என்பதும், தமிழகம் அறிந்த உண்மை. அ.தி.மு.க.,வினர் கூறுவது போல, அவர் எப்போதும் அவதுாறு தான் பேசிக் கொண்டிருப்பாரோ!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X