சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை கடை கொள்ளையில் எம்.பி.ஏ., பட்டதாரி கைது

Added : பிப் 14, 2020
Advertisement

நாகர்கோவில்: மார்த்தாண்டம் நகைக் கடையில், 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், எம்.பி.ஏ., பட்டதாரி கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, விரிகோட்டைச் சேர்ந்தவர், பொன் விஜய். பஸ் ஸ்டாண்ட் எதிரே நகைக்கடை நடத்தி வருகிறார். ஜன., 27ம் தேதி, இவரது வீட்டில், மாடி வழியாக உள்ளே இறங்கிய மர்ம நபர், அங்கிருந்த நகைகளை திருடிய பின், சாவியை எடுத்துச் சென்று, கடையில் இருந்த நகைகளையும் திருடி சென்றார். 200 சவரன் நகைகள் கொள்ளை போயின.

கொள்ளையர்களை பிடிக்க, தனிப்படை போலீசார், கேரளா மற்றும் பல இடங்களுக்கு சென்று, விசாரித்தனர். முடிவில், கொல்லங்கோடு அருகே எஸ்.டி.மங்காட்டைச் சேர்ந்த எட்வின் ஜோஸ், 29, என்ற எம்.பி.ஏ., பட்டதாரியை கைது செய்தனர்.ஏற்கனவே, பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவரது வீட்டில், போலீசார் சோதனை செய்தனர்.

அங்கு, சமீபத்தில் மூடப்பட்ட பள்ளத்தை தோண்டிய போது, பொன் விஜய் கடையில் திருடப்பட்ட நகைகள், துணிப்பையில் வைத்து புதைக்கப்பட்டிருந்தன.அப்பகுதியில் உள்ள, அ.தி.மு.க., பிரமுகரின் நகை விற்பனை மையத்தில் தான், எட்வின் திருட்டு நகைகளை விற்று வந்துள்ளார். அவரிடமும் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X