தமிழகத்தில் இருந்து பால் கேட்கிறது கேரளா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து பால் கேட்கிறது கேரளா

Added : பிப் 14, 2020
Share
 தமிழகத்தில் இருந்து பால் கேட்கிறது கேரளா

கம்பம்: கேரள மாநிலத்தில், பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கூடுதலாக அனுப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் பால் உற்பத்தி, கொள்முதல், விற்பனை என்ற மூன்றையும், அம்மாநில அரசு நிறுவனமான, 'மில்மா' மேற்கொள்கிறது.தினமும், 13 லட்சம் லிட்டர் வரை உற்பத்தி செய்கிறது. கோடையில் பற்றாக்குறை ஏற்படும்போது தமிழகம், கர்நாடகாவில் இருந்து வாங்கப்படும்.இந்தாண்டு, கோடைக்கு முன்னரே, கேரளாவின் பலமாவட்டங்களில், பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து, தினமும், 2.5 லட்சம் லிட்டர் பாலை, மில்மா கொள்முதல் செய்தது.

ஆனால், அங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கேரளாவிற்கு, 1 லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், தமிழக ஆவினின் உதவியை, கேரளா நாடியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சிடமும் பேசியுள்ளார். இதன்படி, கூடுதல் பால் தர உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக, மில்மா கூறியுள்ளது.ஆவின் அதிகாரிகள் கூறும்போது, 'தமிழகத்திலும் பால் உற்பத்தி குறைந்துள்ளது.இருப்பினும், கேரளாவிற்கு கூடுதலாக வழங்க, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X