பொது செய்தி

தமிழ்நாடு

17ல் ஸ்பேனிஷ் திரைப்பட விழா

Added : பிப் 14, 2020
Share
Advertisement

சென்னை : சென்னையில், மூன்று நாட்கள் ஸ்பேனிஷ் திரைப்பட விழா நடக்கிறது.

ஸ்பேனிஷ் துாதரகத்துடன் இணைந்து, இந்தோ - சினி அப்ரிசியேஷன் இணைந்து நடத்தும், ஸ்பேனிஷ் திரைப்பட விழா, சென்னையில், 17ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை, நுங்கம்பாக்கம், கல்லுாரி சாலையில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் வளாகத்தில் நடக்கிறது.துவக்க விழா மாலை, 6:15 மணிக்கு நடக்கிறது. இந்தியாவுக்கான ஸ்பெயின் துாதர் ஆண்டனி லோபோ, விழாவை துவக்கி வைக்கிறார். இந்தோ - பிரெஞ்ச் கலாசார மைய இயக்குனர் புரூனோ, நடிகை சுகன்யா, சிவன் கண்ணன் உள்ளிட்ட பலர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

திரைப்பட விழாவில், பிளவர்ஸ், மார்க்லேண்ட் உள்ளிட்ட ஆறு புகழ்பெற்ற ஸ்பானிஷ் படங்கள் திரையிடப்பட உள்ளன. 18 மற்றும் 19ம் தேதி மாலை, 6:00 மற்றும் 7:35 மணியளவில், படங்கள் திரையிடப்பட உள்ளன. படம் திரையிடலுக்கு பின், படம் தொடர்பான கலந்துரையாடலும், கருத்தரங்கமும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X