பொது செய்தி

தமிழ்நாடு

நங்கநல்லுாரில் இலவச யோகா வகுப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

நங்கநல்லுார் : நங்கநல்லுார் சத்யானந்த யோகா மையத்தின் சார்பில், நான்கு வார இலவச யோகா வகுப்புகள், 17ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு நடக்கிறது.

உடல், மன வலிமையை அதிகப்படுத்தும் வகையில், சத்யானந்த யோகா மையத்தின், சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்புகள், பல பகுதிகளில் நடத்தப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக, நங்கநல்லுார், லட்சுமி நகர் பிரதான சாலை, ஸ்ரீ சுதர்ஷன் டேரஸ் அரங்கில், சத்யானந்த யோகா மையத்தின் சார்பில், இலவச யோகா வகுப்புகள், 17ம் தேதி துவங்கி, நான்கு வாரங்கள் நடத்தப்படுகின்றன.

பீஹார், யோகா பள்ளியால், ஆசனம், பிரணாயாமம், பிரத்யாகாரம் எனும் ஐம்புலன் அடக்கம், தாரணா மந்திரம், உணவு பழக்கவழக்கம், ஷட்கிரியைகள் எனும் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.இப்பயிற்சி வகுப்புகள், வார நாட்களில் தினமும் அதிகாலை, 5:30 மணி முதல் காலை, 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. முன்பதிவிற்கு, 98411 50877, 94450 51015 என்ற மொபைல் எண்ணிலும், syc@satyamyogatrust.net என்ற இ - மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X