சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உறவினர்களால் தாய் சித்ரவதை பார்வையற்ற மகள் திடீர் தர்ணா

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 உறவினர்களால் தாய் சித்ரவதை  பார்வையற்ற மகள் திடீர் தர்ணா

தஞ்சாவூர்: தாயை, உறவினர்கள் கொடுமைப்படுத்துவதாக கூறி, கண் பார்வையற்ற மகள், நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி, 55. இவரது மகள் கல்யாணி, 33; பார்வையற்றவர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், திருமணமாகி வசித்து வருகிறார்.தஞ்சையில் அமராவதி, தனியாக வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான, 642 சதுர அடி இடத்தை, அவரது உறவினர்கள் சிலர் பறித்துக் கொண்டனர். நிலத்தை கேட்ட அமராவதியை, உறவினர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, கலெக்டர் மற்றும், எஸ்.பி., அலுவலகத்தில், கல்யாணி இரு முறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த கல்யாணி, 'தாயாருக்கு சேர வேண்டிய இடத்தை கொடுக்க வேண்டும்; அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறி, தஞ்சை நீதிமன்றம் சாலையில், நேற்று காலை, நடுரோட்டில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தஞ்சை அனைத்து மகளிர் போலீசார், அங்கு வந்து, கல்யாணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X