பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1 கோடியில் மருத்துவமனை விரைவில் திறக்க நடவடிக்கை

Added : பிப் 14, 2020
Advertisement

வேளச்சேரி : வேளச்சேரியில், 1 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம், இம்மாத இறுதியில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், 1995ம் ஆண்டு, ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது.ஆபத்துஅப்போது, சாலை மட்டத்தை விட, 3 அடி உயரத்தில், மருத்துவமனை இருந்தது.சாலை சீரமைக்கும் போது, பழைய சாலையை சுரண்டி போடாமல், அதற்கு மேல் போட்டதால், சாலை மட்டம் உயர்ந்து, மருத்துவமனை, 2 அடி தாழ்வானது.இதனால், ஒவ்வொரு மழைக்கும், தண்ணீர் புகுந்து, மருத்துவமனையை மூடும் சூழல் ஏற்பட்டது. மேலும், சுவர் நனைந்து, ஆபத்தான நிலையில் இருந்தது.

இந்நிலையில், பழைய கட்டடத்தை இடித்து, அதே இடத்தில், 1 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.கட்டுமான பணி, 2018 செப்டம்பரில் துவங்கியது. மொத்தம், 1,900 சதுர அடியில், தரைதளம், 1,300 சதுர அடியில் முதல் தளம் மற்றும் 450 சதுர அடியில், இரண்டாம் தளம் கட்டப்பட்டு உள்ளது.எதிர்பார்ப்புஇதில், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை கூடம், மருந்து பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகள் அமைய உள்ளன.கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளதால், இம்மாத இறுதியில், கட்டடம் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மருத்துவமனையால், வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அம்பேத்கர் நகர், நேரு நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிமக்கள் பயன் அடைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X