சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் பலாத்காரம் பாதிக்கப்பட்ட சிறுமி பலி

Added : பிப் 14, 2020
Share
Advertisement

மரக்காணம்: திண்டிவனம் அருகே, கடந்தாண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள கிராமத்தில், பெற்றோரை பிரிந்து, பாட்டியின் பராமரிப்பில், 8 - 9 வயதுடைய, 2 சிறுமியர் வளர்ந்து வந்தனர். இவர்கள் முறையே, 2 - 4ம் வகுப்பு படித்து வந்தனர்.கடந்த, 2017ம் ஆண்டு, தென்நெற்குணத்தைச் சேர்ந்த துரை, 48, என்ற திருமணம் ஆன நபர், 2 சிறுமியரிடமும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார். இதையறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர், சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துஉள்ளனர்.

விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, கடந்தாண்டு ஜூலை 19ல், பிரம்மதேசம் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து, 14 பேரை கைது செய்தனர்.இந்த சம்பவத்தில் பாதிப்படைந்த, 8 வயது சிறுமி தொற்றுநோய் காரணமாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X