பொது செய்தி

தமிழ்நாடு

இறுதிக்கட்ட பாலப் பணிகள் இழுத்தடிப்பு; ஆபத்தை உணராமல் 'ரிஸ்க்' எடுக்கும் மக்கள்

Added : பிப் 14, 2020
Advertisement
 இறுதிக்கட்ட பாலப் பணிகள் இழுத்தடிப்பு; ஆபத்தை உணராமல் 'ரிஸ்க்' எடுக்கும் மக்கள்

திருநீர்மலை : திருநீர்மலை அருகே, அடையாற்றை ஆபத்தான வகையில் கடப்பதை தடுக்க, கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை விரைந்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

திருநீர்லை - திருமுடிவாக்கம் சாலையில், அடையாற்றில் இருந்த சிறுபாலத்தை இடித்து, பெரிய பாலம் கட்டும் பணி, கடந்தாண்டு துவங்கியது.இதன் காரணமாக, தற்காலிக மண் சாலை போடப்பட்டு, அவ்வழியாக, வாகனங்கள் சென்று வந்தன. சமீபத்தில் பெய்த பருவ மழையில், இச்சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால், திருநீர்மலை - திருமுடிவாக்கம் சாலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இரண்டு மாதத்திற்கு மேல் தொடர்வதால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பெரும் சிரமப்படுகின்றனர்.திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள், பல கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைமை தொடர்கிறது. இதற்கிடையில், பாலம் கட்டும் பணி வேகமெடுத்து, 90 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. ஆனால், இதர பணிகளில் மெத்தனம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், அந்த இடத்தில், தினமும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான வகையில், அடையாற்றை கடக்கின்றனர். இதனால், பெரும் விபரீதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.எனவே, வாகன ஓட்டிகளின் நிலைமையை கருத்தில் வைத்து, கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை, விரைந்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X