பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில், 'சோலார்'; மின் கட்டணம் குறையும்!

Added : பிப் 14, 2020
Advertisement
 அரசு பள்ளியில், 'சோலார்'; மின் கட்டணம் குறையும்!

துரைப்பாக்கம்: தனியார் நிறுவனம், துரைப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளிக்கு, 'சோலார்' அமைத்துக் கொடுத்துள்ளதால், மின்கட்டணம் பாதியாக குறையும் என, பள்ளி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2,000 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 45 வகுப்பறை, 60 ஆசிரியர்கள் உள்ளனர்.இந்த பள்ளியில், ஆண்டுக்கு, 1.10 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. கட்டணத்தை குறைக்க, பள்ளி நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இந்நிலையில், சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த, 'பியூட்ரா டெக் பார்க்' என்ற தனியார் நிறுவனம், பள்ளியில், சோலார் அமைத்துக் கொடுக்க முன்வந்தது.

அதன்படி, 10 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட சோலார், இரண்டு கட்டடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து, தினமும், 40 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.சோலார் உற்பத்தி மின்சாரம், இம்மாதம் முதல் பயன்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக, பள்ளியின் மின் கட்டணம் பாதியாக குறையும் என, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X