சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டலில் காதலர் தின சலுகை : ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்

Added : பிப் 14, 2020
Advertisement
 ஓட்டலில் காதலர் தின சலுகை : ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்

புதுச்சேரி: காதலர் தினத்தில் சலுகைகள் அறிவித்த ஓட்டல்கள் முன், ஹிந்து முன்னணி அமைப்பினர் திரண்டு போாரட்டம் நடத்தினர்.

காதலர் தினம் கொண்டாட, ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஒருசில ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், காதலர் தினத்தையொட்டி, சிறப்பு சலுகைகள் அறிவித்து, பேனர் வைக்கப்பட்டிருந்தது.இதையறிந்த, ஹிந்து முன்னணியினர், அந்த ஓட்டலுக்கு சென்று எச்சரித்தனர்.உடனடியாக பேனர் அகற்றப்பட்டது.

இதேபோன்று, அதே வீதியில் மற்றொரு ஓட்டலில், காதலர்களை வரவேற்கும் வகையில், இதய வடிவிலான பலுான்களை கட்டியிருந்தனர். காதலர்களுக்கு சிறப்பு சலுகையும் அறிவித்து இருந்தனர். அந்த ஓட்டலுக்கு சென்ற ஹிந்து முன்னணியினர், இதய பலுான்களை வெடிக்கச் செய்து, எதிர்ப்பை தெரிவித்தனர்.நாய்க்கு திருமணம்ஹிந்து முன்னணி அமைப்பின், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலர் முருகேசன் தலைமையில், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், கவுந்தப்பாடி நால்ரோட்டில் நேற்று காலை குவிந்தனர்.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆண் நாயை மணமகனாக, வெள்ளாட்டை மணமகளாக அலங்கரித்து, மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.பின், குடை பிடித்தபடி, கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஊர்வலமாக சென்று, காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டனர். இதேபோல், கொடிவேரி அணை பிரிவிலும், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளாடு, நாய்க்கு திருமணம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X