பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுவசதி வாரியத்துக்கு 6 தளம் 'டவர் - 3' கட்டடத்தில் ஒதுக்கீடு

Added : பிப் 14, 2020
Advertisement

கோயம்பேடில் கட்டப்பட்டுள்ள, 'டவர் - 3' அடுக்குமாடி வளாகத்தில், வீட்டுவசதி வாரியத்துக்கு, ஆறு தளங்களை வாடகை அடிப்படையில் ஒதுக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

சி.எம்.டி.ஏ.,வுக்கு கூடுதல் அலுவலக இடம் தேவை என்பதற்காக, கோயம்பேடில், 100 கோடி ரூபாயில், ஒன்பது மாடி வளாகம் கட்டப்பட்டது. சி.எம்.டி.ஏ.,வின் பயன்பாட்டுக்காக என்று கூறி, இதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.ஆனால், கட்டுமான பணி முடிந்த நிலையில், இந்த வளாகத்தை வேறு துறைகளுக்கு வாடகைக்கு விட, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதன்படி, வீட்டுவசதி வாரியம், நகர் - ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இத்துறைகள் ஒப்புதல் தெரிவித்ததால், இடங்கள் ஒதுக்குவது, வாடகை நிர்ணய விஷயங்களை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இறுதி செய்துள்ளனர். இதன்படி, புதிய வளாகத்தில், மேலிருந்து கீழாக, ஆறு தளங்கள், வீட்டுவசதி வாரியத்துக்கு ஒதுக்கப்படுகின்றன.அடுத்த, இரண்டு தளங்கள், டி.டி.சி.பி.,க்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சி.எம்.டி.ஏ.,வின் கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு, வெளிவட்ட சாலை பிரிவுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.மேலும், இந்த வளாகத்தில், சதுர அடிக்கு மாதம், 66 ரூபாய் என்ற அளவில், வாடகை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X