பொது செய்தி

தமிழ்நாடு

சைதை அரசு மருத்துவமனைக்கு ரூ40 கோடி ஒதுக்கக்கோரி மனு

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், எட்டு அடுக்குமாடி கட்டடம் கட்ட, 40 கோடி ரூபாய் ஒதுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பட்டாபிராமைச் சேர்ந்த, எம்.ஜி.ஆர்., விஸ்வநாதன் தாக்கல் செய்த மனு:சைதை அரசு மருத்துவமனை, ௧௯௨௦ல் துவங்கப்பட்டது. இங்கு, ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழைய கட்டடத்தை இடித்து, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எட்டு அடுக்குமாடி கட்டடம் கட்ட அரசு திட்டமிட்டது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கவில்லை.சென்னை மாவட்ட சுகாதார துறையின் கட்டுப்பாட்டுக்கு, இந்த மருத்துவமனையை மாற்றவும், எட்டு அடுக்குமாடி கட்டடம் கட்ட, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும், அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, சுகாதாரத் துறை செயலருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X