சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணக்கில் வராத ரூ 1.35 லட்சம் பறிமுதல்

Added : பிப் 14, 2020
Advertisement

நாகர்கோவில்: நாகர்கோவிலில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், கணக்கில் வராத, 1.35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், இரு தினங்களாக, லஞ்ச ஒழிப்பு துறையினர், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத, 87 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, இரு தரகர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர். நேற்று நாகர்கோவிலில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 1.35 லட்சம் ரூபாய் சிக்கியது. மாவட்ட அலுவலர் குமுதாவிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X