பொது செய்தி

தமிழ்நாடு

'விஷ வாயு தாக்கி தொழிலாளர் பலியாக நேர்ந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை'

Added : பிப் 14, 2020
Share
Advertisement

திருவேற்காடு : துப்புரவு தொழிலாளர், விஷ வாயு தாக்கி பலியாக நேர்ந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு துறை தேசிய ஆணைய உறுப்பினர் தெரிவித்தார்.

திருவேற்காட்டில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும், துாய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்களின் நலன் குறித்த, ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.அதில், துப்புரவு பணியாளர்கள் மறுவாழ்வு துறையின் தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மேனி பங்கேற்றார்.அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தின், 526 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், நான்கு நகராட்சிகள் உள்ளன. அவற்றில், துாய்மை பணியில் ஈடுபடும், துப்புரவு தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு சாதனம், சுகாதாரம், மருத்துவ வசதி மற்றும் மருத்துவ காப்பீடுகள் உள்ளதா?

அவர்களுக்கான ஊதியம், வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறதா என்பதை, தொழிலாளர் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மேலும், தொழிலாளர்களுக்கு, உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென அறிவுறுத்தினார்.அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை, சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கிறது.அதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி இறப்பு நேர்ந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் மீது, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.கூட்டத்தில், திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.சமீபத்தில், திருவேற்காடு, வேலப்பன்சாவடியில் உள்ள, தனியார் பள்ளியின், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த பாலா, 37, என்ற தொழிலாளி விஷவாயு தாக்கி பலியானார். அந்த இடத்தை, ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மேனி பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X