சென்னையில் 15 நாட்கள் போராட்டங்களுக்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 15 நாட்கள் போராட்டங்களுக்கு தடை

Added : பிப் 14, 2020
Share

சென்னை : சென்னை காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இடங்களில், போராட்டம், மனித சங்கிலி நடத்த, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழக நகர காவல் சட்டம், 1888 பிரிவு, 41 உட்பிரிவு, 2ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில், போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், பொது இடங்களில், போக்குவரத்து பகுதிகளில், சாலை, தெருக்களில் கூட்டம் கூடவும், பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனித சங்கிலி போன்றவற்றை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.இந்த தடை உத்தரவு, வரும், 28ம் தேதி வரை, 15 நாட்கள் அமலில் இருக்கும்.இவ்வாறு, கமிஷனர் அறிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X