அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து

Added : பிப் 14, 2020
Advertisement

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: புதுமையான அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொலைநோக்கு திட்டங்கள் இல்லை. வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களை, புதிய தொழிற்சாலைகளுக்கான அறிவிப்புகளோ இல்லை. கண்துடைப்பு அறிவிப்புகள் தான் அதிகம். வளர்ச்சியை ஏற்படுத்தும், வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டங்கள் இடம்பெறவில்லை. மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக, ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, வரவேற்கத்தக்கது. மின் சக்தி, தொழில் துறை, உயர் கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வரி தவிர்த்த அரசின் பிற வருவாய்களை அதிகரிக்க, எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை வரவேற்றாலும், அது கனவாக மட்டும் இல்லாமல், செயல் வடிவத்திலும் மக்களுக்கு நேரடியாக செல்லக்கூடிய திட்டங்களாக இருக்க வேண்டும். மீன் வளத்துறை, மின்சாரம், போக்குவரத்து, கல்வித் துறைக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பிற்கான மிக முக்கிய அறிவிப்பு இல்லாதது, இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு, மாவட்டம்தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை. பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதற்கு, பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது, சிறிது ஏமாற்றத்தை தருகிறது. அறிவித்த திட்டங்களை சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டும். இந்த பட்ஜெட் தான், இந்த அரசின் இறுதி பட்ஜெட். எனவே, தமிழகமும், தமிழக மக்களும் எல்லா வளங்களும், எல்லா நலன்களும் பெற, திட்டங்கள் சென்றடைய வேண்டும்.

த.மா.கா., தலைவர் வாசன்: விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட். ஒட்டுமொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், வளமான தமிழகத்திற்கும் வழிவகுக்கும் என்ற, நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், நிதி ஒதுக்கீடும், திட்டங்களும் இடம்பெற்றுள்ளதால் பாராட்டுக்குரியது.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X