அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதற்கும், யாருக்கும் பத்தாத பட்ஜெட் ; ஸ்டாலின்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (18+ 53)
Advertisement
DMK,Satlin,MKStalin,TN_budget,budget,திமுக,ஸ்டாலின்,பட்ஜெட்

சென்னை : ''பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள, பத்தாவது பட்ஜெட், யாருக்கும் பத்தாத பட்ஜெட்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.


பட்ஜெட் பற்றி, கட்சி தலைவர்களின் கருத்து:


ஸ்டாலின்: துணை முதல்வர், பட்ஜெட்டை, 196 நிமிடம் படித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர், 159 நிமிடங்கள் படித்தார். மத்திய அரசை, எப்படி அ.தி.மு.க., பின்பற்றுகிறது என்பதற்கு, இது எடுத்துக்காட்டு. பட்ஜெட்டில், 'ஜெ., மறைவுக்கு பின், இந்த அரசு நீடிக்காது என, சிலர் கூறி வந்தனர்' என்று, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏனெனில், ஜெ., சமாதியில் உட்கார்ந்து, தியானம் செய்தது; ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியது; ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தது யார் என்பது, அனைவருக்கும் தெரியும். அவருக்கு இது, பத்தாவது பட்ஜெட்; யாருக்கும் பத்தாத பட்ஜெட்; எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

இந்த ஆட்சியில், நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, கடன் சுமை தொடர்ந்து இருந்து வருகிறது. கடன் சுமை, 4.56 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஒவ்வொருவர் தலையிலும், 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது. தி.மு.க., 2011ல் ஆட்சியில் இருந்த வரை, கடன் சுமை, 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ௧௦ ஆண்டுகளில், மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டம் இல்லை. வளர்ச்சி திட்டங்களும் இல்லை.

முதல்வர், அமைச்சர் வேலுமணி, அமைச்சர் தங்கமணியின் துறைகளுக்கு, அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இதன் மர்மம் புரியவில்லை. டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, எப்படி நிறைவேற்றப் போகின்றனர் என்பது தெரியவில்லை. அமைச்சர் ஜெயகுமார், டில்லி சென்று கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பதை, தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், விரைவில் அந்த கடிதத்தை, நான் வெளியிடுவேன்.

சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: மூன்று மணி நேரமாக, நிதி அமைச்சர் தொடர்ந்து வாசித்தார். அசையாமல் உட்கார்ந்து, என்ன சொல்கிறார் என கவனித்தோம். கடைசி வரை எந்த அறிவிப்பையும், அவர் செய்யவில்லை. இதுபோன்ற மோசமான பட்ஜெட்டை, நான் பார்த்ததே இல்லை. எந்த பிரிவினருக்கும், எந்த துறைக்கும், எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. இந்திய முஸ்லிம் லீக் - அபூபக்கர்: முழுமையான பட்ஜெட்டில், அறிவிப்புகள் வரும் என்றனர்; ஆனால், எதுவும் இல்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறி வரும் அரசு, வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. மத்திய அரசு நிதி தரவில்லை என, குற்றம் சாட்டியுள்ளனர்.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல், போகிற போக்கில், அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் வழியே, காற்றில் வரைந்த ஓவியமாக, இ.பி.எஸ்., அரசின், பட்ஜெட் அமைந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நிதி நிலை அறிக்கைகள், வெறும் அறிவிப்புகளாக இருந்ததை போலவே, தங்களின் கடைசி முழு பட்ஜெட்டையும், இந்த ஆட்சியாளர்கள் தாக்கல் செய்து உள்ளனர்.

நெருங்கிவரும் தேர்தலை கண்டு, திறனற்ற ஆட்சியாளர்கள், எந்த அளவிற்கு குழப்பத்திலும், பதற்றத்திலும் இருக்கின்றனர் என்பதை காட்டும் வகையில், இந்த பட்ஜெட்டும் அமைந்திருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (18+ 53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-பிப்-202012:07:56 IST Report Abuse
இந்தியன் kumar நீங்கள் புகழ்ந்தால்தான் அதிசயம்.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-பிப்-202009:06:18 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடுத்து சி எம் இவைகள் தானாம் பாருங்க தூண்டுவிழாதபட்ஜெட் சமர்பிக்கப்போறாங்க பாலம் தேனும் ஆராஓடப்போறது தமிழ்நாட்டுலே (எல்லா டாஸ்மாக்கிலேயும்) லோகத்துலேயே ரொம்பவே சூலம்]பாம் குற்றம்காண்பதுமட்டுமேதான் ,சுடாலின் துரையாண்டிக்கெல்லாம் குற்றம்களேதான் தெரியும் ஆதுபோலவேதான் ராகுல் என்ற அறிவுஜீவிக்கும் அவன் தான் பிஜேபிக்கே வேலையில்லாமல் திண்ணையிலேகுந்திண்டுகுத்தம்களே கண்டுபிடிக்கும் மாமனார்
Rate this:
Share this comment
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
15-பிப்-202021:35:38 IST Report Abuse
sankaranarayanan பத்தாவது பட்ஜெட், யாருக்கும் பத்தாத பட்ஜெட்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை அனைவரும் வரவேற்கிறோம். காரணம் இந்த பட்ஜெட்டை நெருப்பினால் பத்த வைத்தாலும் பத்தாதது. ஏனென்றால் இது ஆ ஆ தி மு க கொண்டு வந்த பட்ஜெட் .நெருப்பிலும் பத்தாது - தண்ணீரில் கரையாது காற்றிலும் அடித்து செல்லப்படாதது. அவர் வாயிற்றுக்கு சர்க்கரைதான் போடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X