சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம் : முதல் செயற்கைக்கோள்

Added : பிப் 14, 2020
Advertisement


உலகில் முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் 'ஸ்புட்னிக் 1'. இதனை அப்போதைய சோவியத் யூனியன் 1957 அக்.4ல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இது 58 செ.மீ., விட்டம் கொண்டது. இதில் நான்கு ரேடியோ ஆன்டனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் ஆய்வு காலம் 21 நாட்கள். இதன் எடை 83.6 கிலோ. இது விண்வெளியில் மணிக்கு 29 ஆயிரம் கி.மீ., வேகத்தில் சுற்றியது. இது ஒருமுறை பூமியை நீள்வட்டபாதையில் சுற்றுவதற்கு 96.2 நிமிடங்கள் ஆகின. மொத்த பயண காலத்தில் 1,440 முறை பூமியை சுற்றியது.


தகவல் சுரங்கம் : இயற்பியலில் முதல் பரிசு


நோபல் பரிசை 1895ல் ஆல்பிரட் நோபல் தொடங்கினார். இது ஆண்டுதோறும் மருத்துவம், வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசை முதன்முதலில் வென்றவர் ஜெர்மனியின் வில்லேம் கோன்ராட் ராண்ட்ஜன். 'எக்ஸ்ரே' கண்டு பிடிப்புக்காக இவருக்கு நோபல் வழங்கப்பட்டது. 1845 மார்ச் 27ல் பிறந்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பி.எச்டி., பட்டம் பெற்றுள்ளார். துவக்கத்தில் பேராசிரிய ராக பணிபுரிந்தார். பின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X