சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சி.ஏ.ஏ.க்கு எதிரான போராட்டத்தில் முதியவர் உயிரிழப்பா? போலீசார் மறுப்பு

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல்வீசி தாக்கியதில், இணை கமிஷனர் விஜயகுமாரி காயமடைந்தார். போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனை கண்டித்து விடிய விடிய போராட்டம் நடந்தது. தடியடி நடத்தப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதனிடையே, போராட்டத்தில், முதியவர் உயிரிழந்ததாக
CAA,anti_CAA_protest,chennai,lathicharge,சிஏஏ, சென்னை, தடியடி, போராட்டம், போலீஸ்கமிஷனர்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல்வீசி தாக்கியதில், இணை கமிஷனர் விஜயகுமாரி காயமடைந்தார். போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனை கண்டித்து விடிய விடிய போராட்டம் நடந்தது. தடியடி நடத்தப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போராட்டத்தில், முதியவர் உயிரிழந்ததாக வெளியான தகவலை சென்னை போலீசார் மறுத்துள்ளனர்.


latest tamil newsசென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக த.மு.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்திய பின்பும், யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே முதியவர் ஒருவர் தள்ளுமுள்ளுவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் விடிய விடிய போராட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.


latest tamil news
போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தைசென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் தலைவர்களுடன் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.


துணை கமிஷனர் காயம்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், அதில் இணை கமிஷனர் விஜயகுமாரி காயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த விஜயகுமாரியை, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் சந்தித்து நலம் விசாரித்தார்.


கைதை கண்டித்து போராட்டம்


சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேனி அருகே கம்பம்மெட்டு, மதுரை- கோரிபாளையம், வேலூர், ஊட்டி- சேர் கிராஸ், திருச்சி- பாலக்கரை, திருப்பூர்- தாராபுரம், திருவள்ளூர்- செங்குன்றம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடக்கிறது.


போக்குவரத்து பாதிப்பு

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் மற்றும் கிண்டியில் போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காவல் ஆணையர் ஏகேவி நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தியதில் பிரச்சினை சுமூகமாக முடிந்தது. கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தடியடி நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை,நெல்லை, நாகை, ராமநாதபரம், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.


போலீசார் மறுப்பு


இதனிடையே போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பொய்யான செய்தி. போராட்டத்தில், பங்கேற்றவர்களின் உடல்நலம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை. முதியவர் இறந்ததற்கும் சிஏஏவிற்கு எதிரான போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.


ஸ்டாலின் கண்டனம்


சிஏஏவுக்கு எதிராக அமைதியாக போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்.,14 கறுப்பு நாளாக மாற்றிய போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன், அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அமைதியான போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்ற திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் நடக்கும் போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தை அரசு கடைபிடிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.


1,200 பேர் மீது வழக்கு


சென்னை தடியடியை கண்டித்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 6 இடங்களில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 1200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தடியடியை கண்டித்து விருதுநகரில் 200க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
17-பிப்-202004:36:27 IST Report Abuse
B.s. Pillai The turning of peaceful agitation into violence is a calculated, preplanned plot by vested interests to disturb the peace in Tamil Nadu. The agitation had taken place without the Police giving permission. so the Tamil Nadu public should not believe rumours and vested media reports , as most of the medias are biassed. I hope and trust that public should not become emotional and take unpleasant actions to disturb peace in the land.
Rate this:
Cancel
சுடலைகாண் - சென்னை,இந்தியா
16-பிப்-202010:38:13 IST Report Abuse
சுடலைகாண் இசுலாமியர்கள் வன்முறையின் மூலம் அரசை மிரட்ட நினைக்கிறார்களா இல்லை இந்து மக்களை மிரட்ட நினைக்கிறார்களா ? CAA ஆல் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை .வேண்டுமென்றேய் இந்துக்களை எதிர்க்க மிரட்ட போராட்டம் வன்முரை . இந்துக்களை மதவாதிகளாக மாற்றி விடாதீர்கள்
Rate this:
Cancel
SHUNMUKHUM - ERODE,இந்தியா
15-பிப்-202017:51:24 IST Report Abuse
SHUNMUKHUM போடுவீர்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X