பொது செய்தி

தமிழ்நாடு

4 நாட்களுக்கு சட்டசபை: சபாநாயகர் அறிவிப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: ''சட்டசபை கூட்டம், நாளை மறுநாள் முதல், 20ம் தேதி வரை நடக்கும்,'' என, சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம், நேற்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தை, எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின், சபாநாயகர் தனபால் கூறியதாவது:சட்டசபை மீண்டும், நாளை மறுநாள் கூடும். அன்று, பட்ஜெட் மீதான விவாதம் துவங்கும். அடுத்து, 18, 19ம் தேதிகளிலும், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். வரும், 20ம் தேதி, பட்ஜெட் மீதான விவாதத்திற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பதிலுரை வழங்குவார்.அன்று, அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். தினமும் காலை, 10:00 மணிக்கு, சட்டசபை கூடும். கேள்வி நேரம் உண்டு. மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X