கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஹெராயின்' கடத்த முயன்றவருக்கு சிறை

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்தவர் முனவர்பாட்ஷா, 37. இவர், 2017ல், சென்னையிலிருந்து, இலங்கைக்கு விமானம் வாயிலாக, 'ஹெராயின்' போதைப் பொருள் கடத்த முயன்றார்.

தகவல் அறிந்த, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், முனவர் பாட்ஷாவை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.தேன்மொழி முன் நடந்தது. விசாரணை முடிவில், 'முனவர் பாட்ஷா மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. 'அவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என, நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X