அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசின் பட்ஜெட்டில் கவர்ச்சி அறிவிப்பு இல்லை!

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (16+ 95)
Advertisement
Tamilnadu, Budget, OPS,NirbayaFund, CCTV, GovtBus, FinanceMinister, தமிழகம், தமிழ்நாடு, பட்ஜெட், நிர்பயா, திட்டம், சிசிடிவி, கண்காணிப்பு, அரசுபேருந்து,

தமிழக அரசின் 2020 - 21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று சட்டசபையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அ.தி.மு.க. அரசின் தேர்தல் கால பட்ஜெட் என்பதால் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்ச்சி அறிவிப்புகள் எதுவுமில்லை. அரசின் வருவாய் பற்றாக்குறை கடன் அளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் புதிய இலவச அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.யுடன் இணைந்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களும் பயனடையும் வகையில் 'புரட்சித் தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்' விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி இயற்கை மரணங்களில் தற்போது வழங்கப்படும் இறந்தவர் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயாகவும்; விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும். இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ஆயுள் காப்பீடு திட்டத்தில் பயன் பெற முடியாதவர்களுக்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து நிவாரண திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடனாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம் உட்பட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டின்படி வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடி ரூபாயாகவும்; கடன் சுமை 4.57 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளன.
தொடரும் பற்றாக்குறை!
அ.தி.மு.க., அரசு தொடர்ந்து, எட்டாவது முறையாக, பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்துஉள்ளது. 2014 - 15ம் நிதியாண்டு கணக்குப்படி, தமிழகத்தில், 6,407 கோடி ரூபாய், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அடுத்த நிதியாண்டில், திருத்திய மதிப்பீட்டில், 9,481 கோடி ரூபாயாக பற்றாக்குறை உயர்ந்தது. கடந்த, 2016 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட, இடைக்கால பட்ஜெட்டில், 9,154 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜூனில் தாக்கலான பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 15 ஆயிரத்து, 854 கோடி ரூபாயானது. இதன்பின், 2017 பட்ஜெட்டில், 15 ஆயிரத்து, 930 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது.

அடுத்து, 2018 பட்ஜெட்டின்படி, வருவாய் பற்றாக்குறை, 17 ஆயிரத்து, 491 கோடி ரூபாய். 2019 பட்ஜெட்டில், 14 ஆயிரத்து, 314 கோடி ரூபாயாக, பற்றாக்குறை இருந்தது. அந்த ஆண்டுக்கான திருத்திய மதிப்பீட்டில், பற்றாக்குறை, 25 ஆயிரத்து 71 கோடி ரூபாயாக அதிகரித்தது. நேற்று தாக்கல் செய்த 2020- 21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை, 21 ஆயிரத்து 617 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, கடன் சுமையும் அதிகரித்தபடி உள்ளது.

2017 - 18ம் ஆண்டு பட்ஜெட்டில், 3.14 லட்சம் கோடி ரூபாய், கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து, 2018 - 19 பட்ஜெட்டில், 3.55 லட்சம் கோடி ரூபாயாக கடன் உயர்ந்தது. கடந்த பட்ஜெட்டில், 3.97 லட்சம் கோடி ரூபாயாக, மேலும் உயர்ந்து, இந்த ஆண்டு பட்ஜெட்டில், 4.5௭ லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை, மாநிலத்தின் கடன் தொட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், நிலுவை கடன் அளவு அதிகரித்தபடி வருவதால், நிதி நிலைமை மோசமாகும் அபாயம் உள்ளது. கடனுக்கான வட்டி மட்டும், 37 ஆயிரத்து, 120 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. தற்போதைய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட கடன் அளவுப்படி, தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும், 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது. சிக்கலான நிலையில் நிதி நிலைமை! பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: சில துறைகளில் காணப்படும், மந்தநிலை காரணமாக, மத்திய அரசின் வரி வரவினங்கள், குறிப்பாக ஜி.எஸ்.டி., வரி, மோட்டார் வாகன வரிகள், வரவு - செலவு திட்ட இலக்குகளை காட்டிலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., வரியில், 2017 - 18 முதல், தமிழகத்திற்கு சேர வேண்டிய, 4,073 கோடி ரூபாய், நடப்பாண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என, நம்புகிறோம்.

மத்திய அரசிடமிருந்து, தமிழகத்தின் பங்காக பெறப்படும், மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு, 2019 - 20ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. இது, பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின், 2019 - 20 பட்ஜெட்டில், தமிழகத்திற்கு, 33 ஆயிரத்து, 978 கோடி ரூபாய் வழங்கப்படும் என, குறிப்பிட்டிருந்தது. தற்போது, திருத்த மதிப்பீடுகளில், 26 ஆயிரத்து, 392 கோடி என, குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, 2019 - 20ம் ஆண்டுக்கான, மத்திய வரிகளில், தமிழகத்திற்கான பங்கில், 7,586 கோடி ரூபாய் குறைவு ஏற்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள, வரலாறு காணாத இறக்கம், தமிழகத்தின் நிதி நிலைமையை, சிக்கலான சூழ்நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.

மாநில அரசு, தன் அத்தியாவசிய செலவினங்களை எதிர்கொள்ள, மத்திய வரி நிதிப்பகிர்வு அல்லாத, பிற நிதி ஆதாரங்களை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டது. பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டதற்கு மேலாக, வரியல்லாத வருவாயில், கூடுதல் வசூலை உறுதி செய்ததன் வழியாகவும், பல்வேறு திட்டங்களுக்காக, மத்திய அரசிடமிருந்து மானியங்களை பெற்றதன் வாயிலாகவும், பற்றாக்குறையை, அரசு ஓரளவுக்கு சரி செய்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மத்திய அரசுடன் மேற்கொண்ட, சீரிய தொடர் நடவடிக்கைகளால், இது சாத்தியமானது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


பற்றாக்குறைக்கு என்ன காரணம்


வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 'உதய்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கடன் மற்றும் நஷ்டத்தை ஏற்றதன் காரணமாக மாநிலத்திற்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்தியதன் விளைவாகவும், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாயில் ஏற்பட்ட தொய்வு போன்ற அனைத்தும் வருவாய் பற்றாக்குறை உயர்வதற்கான காரணங்களாகும். மேலும் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான செலவினங்களும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (16+ 95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
16-பிப்-202008:06:49 IST Report Abuse
Nallavan Nallavan அதென்ன கவர்ச்சி அறிவிப்பை எதிர்பாக்குறாங்க ???? கவர்ச்சி நடிகைக்கு கலைமாமணி விருதை இப்பவே அறிவிக்கணுமா ???? கவர்ச்சி அறிவிப்பை பட்ஜெட்டுல சேர்த்தவங்க எல்லாம் பிரச்னையே இல்லாமே ஆட்டையப்போட்டுட்டு பீச்சுல நிரந்தரத் தூக்கத்துல இருக்காங்க .....
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
15-பிப்-202022:09:48 IST Report Abuse
m.viswanathan கவர்ச்சி அறிவிப்புன்னா என்னங்க , ஜாக்கெட் போடாம வருமா
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
15-பிப்-202020:45:18 IST Report Abuse
Ravichandran இனி தமிழகம் கடன் வாங்கு தகுதியை இழந்துவிட்டது, பாருங்க மக்களே ரெண்டு கழகமும் மாத்தி மாத்தி கொள்ளையடித்ததின் விளைவோ நாம் கடன்காரர்கள். மணல் கொள்ளை போதைப்பொருள் விற்பனை கொள்ளை அலைவரிசை கொள்ளை சாலைபோடுவதில்கொள்ளை, அதற்குமேல் அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் இல்லாமல் ஒருவேலயும் செய்யமாட்டார்கள். சூப்பர் ஜனநாயகம். இதில இன்னும் ஆட்சி அதிகாரம் வேண்டுமாம். இனி ஒட்டு ஒன்னு பி ஜெ பி கு இல்லைனா ரஜினிக்கு. வந்த மாத்திரம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X