சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு : ஜெயகுமார் நண்பர்கள் இருவர்சரண்

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக, ஜெயகுமாரின் நண்பர்கள் இருவர், சென்னை நீதிமன்றங்களில் நேற்று சரணடைந்தனர்.

வி.ஏ.ஓ., ஒருவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4, குரூப் - 2ஏ' தேர்வுகளில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயகுமாரின், போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயகுமாரிடம் நடத்திய விசாரணையில், உடந்தையாக செயல்பட்டவர்கள் குறித்து, போலீசில் தெரிவித்துள்ளார். இதில், அவரது நண்பர்கள் பலரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த முறைகேடு வெளிவந்தவுடன், அவர்களில் பலர் தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே, 'குரூப் - 2ஏ, குரூப் - 4' தேர்வுகளில் முறைகேடு செய்ய, உடந்தையாக இருந்த ஜெயகுமாரின் நண்பர், திருச்சியை சேர்ந்த செல்வேந்திரன், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். தமிழ் ஆசிரியரான அவர், முறைகேடாக விடைத்தாள்களில் விடை எழுதி கொடுத்துள்ளார்.

அதேபோல, தேர்வு எழுதி முறைகேடு செய்த, சென்னை, கொளத்துாரை சேர்ந்த பிரபாகர் என்பவரும், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரணடைந்த இருவரும், 15 நாள் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், அத்தியூர் வி.ஏ.ஓ., அமல்ராஜ், 23, என்பவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று கைது செய்தனர்.இவர், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நாராயணன் என்பவர் வாயிலாக, ஜெயகுமாருக்கு, ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், 'குரூப் - 4' தேர்வு முறைகேட்டிற்கு, விழுப்புர மாவட்ட இடைத்தரகராகவும் செயல்பட்டுள்ளார். தேர்வு முறைகேடு தொடர்பாக, இதுவரை, 'குரூப் - 2 ஏ' தேர்வில், 22 பேர்; 'குரூப் - 4' தேர்வில், 20 பேர்; வி.ஏ.ஓ., தேர்வில், நான்கு பேர் என, 46 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்; ஐந்து பேர் சரணடைந்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X