சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சரிடம் போலீஸ், 'கிடுக்கிப்பிடி'

Added : பிப் 14, 2020
Advertisement
 'மாஜி' அமைச்சரிடம் போலீஸ், 'கிடுக்கிப்பிடி'

சென்னை: ரூபாய் 1.௬௨ கோடி மோசடி தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டியை சேர்ந்தவர் செந்தில் பாலாஜி, 44. இவர், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2011 - 15ல், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, தன் சகோதரர் அசோக்குமாருடன் சேர்ந்து, 81 பேருக்கு, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக, 1.62 கோடி ரூபாய் பெற்று, மோசடி செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி, செந்தில் பாலாஜிக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.அதன்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, மத்திய குற்றப்பிரிவில், செந்தில் பாலாஜி நேற்று காலை ஆஜரானார். அவரிடம், 9:30 முதல், 1:30 மணி வரை, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, வழக்கில் எங்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்.

மேலும், எப்போது சம்மன் அளித்தாலும் ஆஜராவேன். போலீசார் கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் அளித்துள்ளேன். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.அதன்பின், மாலையிலும், மத்திய குற்றப்பிரிவில் செந்தில் பாலாஜி ஆஜரானார். அப்போதும், போலீசார் பல கேள்விகளை கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X