அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் அமைதி மாநிலம் பன்னீர்செல்வம் பெருமிதம்

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: ''மக்கள் எளிதில் அரசை அணுகி, தேவைகளை நிறைவு செய்யும் மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கி உள்ளோம்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பட்ஜெட் உரையில், அவர் கூறியதாவது:ஜெயலலிதா மறைவுக்கு பின், இந்த ஆட்சி நீடிக்காது என்றெல்லாம் சிலர் கூறி வந்தனர். ஆனால், ஜெ., காட்டிய வழியில், மிகத் திறமையுடன் செயல்பட்டு வரும் அரசு, விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் கருத்துக்களை பொடி பொடியாக்கி, தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருகிறது.தமிழகத்தை தொடர்ந்து, அமைதி பூங்காவாக விளங்க செய்து வருகிறோம்.

அனைவருக்கும் இசைவான கொள்கைகளுடன், பணியாற்றி வருகிறோம். மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அதற்கு உடனடியாக தீர்வு வழங்கி வருகிறோம்.மக்கள் அமைதியாக வாழ்வதற்கும், அவர்களின் லட்சியங்களை அடைவதற்கும், எளிதில் அரசை அணுகி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X