பொது செய்தி

தமிழ்நாடு

பத்திர பதிவு வருவாய் 14 சதவீதம் உயரும்!

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: 'பத்திரப்பதிவு வாயிலாக கிடைக்கும் வருவாய், ஆண்டுக்கு, 14 சதவீதம் அதிகரிக்கும்' என பட்ஜெட்டில் மதிப்பிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில், சில ஆண்டுகளாக, வருவாய் இலக்கை எட்ட முடியாமல் இருந்தது. இதனால், ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும், வருவாய் இலக்கு இறங்கு முகத்தில் திருத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், பத்திர பதிவுத் துறை வருவாய், 2017 - 18 முதல் முன்னேற்ற பாதைக்கு வந்துள்ளது; 2018 - 19ம் நிதியாண்டில், வருவாய் இலக்கான, 11 ஆயிரத்து, 512 கோடி ரூபாய் எட்டப்பட்டது.அதனால், 2019 - 20ம் நிதியாண்டுக்கு, 13 ஆயிரத்து, 122 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 2019 டிச., 31 வரையிலான நிலவரப்படி, 80 சதவீதத்தை பதிவுத் துறை எட்டியுள்ளது. மீதமுள்ள, 20 சதவீதம், மார்ச்சிற்குள் எட்டப்பட்டு விடலாம்.

இது தொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், பொது கட்டட விதிகள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, சொத்து விற்பனை தொடர்பான பத்திரப்பதிவு அதிகரித்துள்ளது. இதனால். வருவாய் இலக்கு உயர்ந்து வருகிறது.பத்திரப்பதிவு வருவாய், ஆண்டுக்கு, 14 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், 2020 - 21 நிதி ஆண்டுக்கான பத்திரப்பதிவு வருவாய் இலக்கு, 14 ஆயிரத்து, 435 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X