கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவின் பினாமி என நடவடிக்கை? : எதிர்த்து கட்டுமான நிறுவனம் வழக்கு

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: சசிகலாவின் பினாமி என, கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, வருமான வரித்துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, 'கங்கா பவுண்டேஷன்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனு:சோதனைகட்டுமான தொழிலில் உள்ள எங்கள் நிறுவனம், பெரம்பூரில், 'ஸ்பெக்ட்ரம் மால்' என்ற வணிக வளாகத்தை, கூட்டு சேர்ந்து கட்டியது. எங்கள் நிறுவனத்தில், ௨௦௧௭ நவம்பரில் சோதனை நடந்தது. சசிகலா உறவினர்களின் வீட்டில் நடந்த சோதனையை தொடர்ந்து, எங்கள் நிறுவனத்தில் இந்த சோதனை நடந்தது.அதைத்தொடர்ந்து, வருமான வரி சட்டத்தின் கீழ், எங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதன் விசாரணை நிலுவையில் இருக்கும் போது, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்கும்படி, நோட்டீஸ் வந்தது. நோட்டீசில், வி.கே.சசிகலாவின் பினாமியாக என்னை குறிப்பிட்டுஇருந்தனர்.'பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், பினாமி சொத்தாக ஏன் கருதக்கூடாது' என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, அந்த நோட்டீசில் கூறப்பட்டது.எங்கள் நிறுவனத்துக்கு, ஸ்பெக்ட்ரம் மால் வணிக வளாகத்தில், ௬௫ சதவீத பங்குகள் இருந்தன.

முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு நெருக்கமானவர்களின் பிரதிநிதிகள் எனக்கூறி, சிலரிடம் இருந்து அழுத்தம் வந்தது. கையெழுத்துவங்கியில் இருந்து பெற்ற கடனுக்கு வட்டி சுமை அதிகரித்ததால், வணிக வளாகத்தில் எங்களுக்குரிய பங்குகளை, 175 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டோம்.அப்போது, ஜெயலலிதா சார்பில் பேச்சு நடத்துவதாக, 2016 செப்டம்பரில், வழக்கறிஞர் செந்தில் வந்தார்; 192.50 கோடி ரூபாய் என, முடிவானது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்படி, வழக்கறிஞர் செந்தில் மற்றும் அவரது ஆட்கள் கூறினர். கடந்த, ௨௦௧௬ டிசம்பரில், ௧௩௦ கோடி ரூபாய்க்கு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தனர். அதிலும், சில கோடி ரூபாய்களை கழித்து விட்டு, 119 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தனர்.பண மதிப்பிழப்பு நோட்டுகளை பெற, நாங்கள் மறுத்தோம். அந்த நோட்டுகளை பயன்படுத்தவில்லை என்றால், தங்களிடம் ஒப்படைத்து விடும்படி அவர்கள் கூறினர்.

அதன்படி, ஒரு பகுதியை திருப்பி கொடுத்து விட்டோம். இந்த பரிவர்த்தனை அனைத்தும், வணிக ரீதியானது. பினாமிதாரர் என்ற வரையறைக்குள் வராது.உத்தரவுசசிகலா, கிருஷ்ணபிரியா, விவேக் ஜெயராமன், செந்தில் ஆகியோரது வாக்குமூலம், ஆவணங்களை அளிக்கும்படி கோரினோம். அவர்களை குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கும்படியும் கேட்டோம். அப்போது தான், பினாமி பரிவர்த்தனை இல்லை என்பதை நிரூபிக்க முடியும்.இந்நிலையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், 2020 ஜனவரியில், வருமான வரி துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சொத்து முடக்கம் தொடரும் என, அதில் கூறப்பட்டுள்ளது. எங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்காமல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, வருமான வரி துணை ஆணையருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை, மார்ச், ௬க்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X