தமிழக வாக்காளர்கள் 6.13 கோடியாக உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக வாக்காளர்கள் 6.13 கோடியாக உயர்வு

Added : பிப் 14, 2020
Share
சென்னை: தமிழகம் முழுவதும், நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர்கள் எண்ணிக்கை, 6.13 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும், 2019 ஜனவரி, 31ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, 5.91 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின், மார்ச் மாதம், லோக்சபா தேர்தலை ஒட்டி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 5.98 கோடிவாக்காளர்கள் இருந்தனர்.திருத்தப்
 தமிழக வாக்காளர்கள் 6.13 கோடியாக உயர்வு

சென்னை: தமிழகம் முழுவதும், நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர்கள் எண்ணிக்கை, 6.13 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும், 2019 ஜனவரி, 31ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, 5.91 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின், மார்ச் மாதம், லோக்சபா தேர்தலை ஒட்டி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 5.98 கோடிவாக்காளர்கள் இருந்தனர்.திருத்தப் பணிஉள்ளாட்சி தேர்தலை ஒட்டி, டிசம்பர் மாதம், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, வாக்காளர்கள் எண்ணிக்கை, 6 கோடியே, 1,329 ஆக உயர்ந்தது.மீண்டும் கடந்த மாதம், வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக, நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஜனவரி, 20 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 14.65 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில், 14.02 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.பெயர் நீக்கலுக்காக, 1.18 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இடப்பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப் பதிவு போன்ற காரணங்களுக்காக, 97 ஆயிரத்து, 155 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. திருத்தம் கோரி, 1.78 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1.22 லட்சம் ஏற்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் கோரி, 1.14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவற்றில், 90 ஆயிரத்து, 943 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.திருத்தப் பணி முடிந்து, நேற்று அனைத்து மாவட்டங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.வெளிநாட்டவர்அதன்படி, தமிழகத்தில், 3.03 கோடி ஆண்கள்; 3.10 கோடி பெண்கள், 6,497 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 6.13 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும், 16 பேரின் பெயர்களும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு நடந்த சிறப்பு திருத்தப் பணியின் போது, 18 முதல், 19 வயதுள்ள வாக்காளர்கள், 5.85 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 3.22 லட்சம் பேர் ஆண்கள்; 2.63 லட்சம் பேர் பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர், 200 பேர்.வாக்காளர் பட்டியலை, elections.tn.gov.in என்ற, இணையதளத்தில் காணலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.சோழிங்கநல்லுாரில்அதிகம்! தமிழகத்தில், அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக, சோழிங்கநல்லுார் உள்ளது.

இத்தொகுதியில், 6.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களில், 3.32 லட்சம் பேர் ஆண்கள், 3.28 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர், 89 பேர். குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி யாக, சென்னை, துறைமுகம் சட்டசபை தொகுதி உள்ளது.இங்கு, 93 ஆயிரத்து, 333 ஆண்கள், 82 ஆயிரத்து, 952 பெண்கள், 52 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.விண்ணப்பிக்க வாய்ப்பு!வாக்காளர் பட்டியல், தொடர் திருத்த நடைமுறை, தற்போது செயல்பாட்டில் உள்ளது. 2020 ஜனவரி, 1ம் தேதியில், 18 வயது நிரம்பியவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில், படிவம் - 6ஐ சமர்ப் பித்து விண்ணப்பிக்கலாம். www.nvsp.in என்ற, இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து, 'voter Helpline App' என்ற, 'மொபைல் ஆப்' பதிவிறக்கம் செய்து, அதன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மையங்களை, '1950' என்ற, இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், 1800 42521950 என்ற, இலவச தொலைபேசி எண் செயல்படுகிறது.வாக்காளர் பட்டியல்: ஆணையம் உத்தரவுநகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை, 10 நாட்களுக்குள் தயாரிக்க, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் மட்டும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்காளர் இறுதிப் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே, மாநில தேர்தல் ஆணையம் வாயிலாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியல் அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்த, வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்க வேண்டும். வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை, அதிகபட்சம், 10 நாட்களுக்குள், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X